ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பட்லாபூர் படத்தில், யாமி கவுதமின் அருகில் நிற்க, வருண் தவான் முதலில் கூச்சப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், வருண் தவான், யாமி கவுதம் நடிப்பில், பட்லாபூர் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில், படக்குழு ஈடுபட்டுள்ளது. இதில் வருண் தவான் கூறியதாவது, படத்தின் சூட்டிங் துவங்குவதற்கு முன்பே, டைரக்டர் ஸ்ரீராம் ராகவன், என்னிடம், இந்த படத்தில் நீங்களும், யாமியும், கணவன் - மனைவியாக நடிக்க உள்ளீர்கள். எனவே யாமியுடன் நன்றாக பழகிக்கொள்ளுமாறு கூறினார். அவர் கூறியவுடன், நானும் யாமி இருக்கும் அறைக்கு சென்றேன். யாமி சாதாரணமாக தான் இருந்தார். ஆனால், தன்னால், சிறிதுநேரம் கூட அவர் பக்கத்தில் நிற்கமுடியவில்லை, உடனே அறையிலிருந்து வெளியேறிவிட்டேன். அதேபோல, சூட்டிங்கின் போதும், யாமியுடன் நடிக்க முதலில் கூச்சப்பட்டதாக வருண் தவான் கூறினார்.