ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சூஜித் சிர்கார் இயக்கத்தில், தீபிகா படுகோனே, இர்பான் கான் நடித்து வரும் படம் பிக்கு. இவர்களுடன் பாலிவுட்டின் பிக் 'பி'யான அமிதாப் பச்சனும் நடிக்கிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் வாரணாசியில் நடந்து வருகிறது. இதற்காக தீபிகா, இர்பான் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் வாரணாசியில் முகாமிட்டுள்ளனர். வாரணாசியில் தீபிகா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் வந்திருப்பதை அறிந்த அந்தபகுதியினர் ஏராளமானபேர் அங்கு கூடிவிட்டனர். போலீசார் பொதுமக்களை கட்டுப்படுத்தி ஷூட்டிங்கிற்கு பாதிப்பு ஏற்படாத படி படக்குழுவுக்கு பாதுகாப்பு கொடுத்தனர். வாரணாசியில் இர்பான்-தீபிகா சம்பந்தப்பட்ட காட்சிகளும், அங்குள்ள கங்கை நதியில் படகில் பயணம் செய்தபடி ஒரு பாடல் காட்சியை எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.