ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கே.சி.பொகாடியா இயக்கி வரும் படம், ''டர்ட்டி பாலிடிக்ஸ்''. இப்படத்தில் மல்லிகா ஷெராவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாலியல் தொழிலாளியான இவர், அரசியலில் உயர்ந்த இடத்தை பிடிக்க என்னவெல்லாம் செய்கிறார் என்பது தான் படத்தின் கதை. இப்படத்தில் மல்லிகாவுடன், மூத்த நடிகர்களான ஓம் புரி, அனுபம் கெர் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்கள் தவிர ஜாக்கி ஷெரப், அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் மல்லிகா ஷெராவத், மூத்த நடிகரான ஓம் புரியுடன் நெருக்கமாக படுக்கையறை காட்சிகளில் எல்லாம் நடித்துள்ளார்.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் கே.சி.பொகாடியா கூறுகையில், படத்தில் மல்லிகா, ஓம் புரியுடன் படுக்கையறை காட்சிகளில் நடிப்பது போன்று ஒரு சூழல், படத்திற்கு அந்தக்காட்சி மிகவும் அவசியம். இதுப்பற்றி மல்லிகாவிடம் கூறினேன், கண்டிப்பாக இந்தக்காட்சி தேவை என்றும் கூறினேன். மல்லிகா மறுப்பு ஏதும் சொல்லாமல் நடித்தார். ஓம் புரி மூத்த நடிகராக இருந்தாலும், அவருடன் இப்படியொரு காட்சியில் தில்லாக, சிறப்பாக நடித்தார். மல்லிகா ஒரு அற்புதமான நடிகை. அவரது நடிப்பு திறமையை பார்த்து எனது அடுத்த படத்திலும் அவரை நடிக்க வைக்க எண்ணியுள்ளேன். இந்தப்படம் பற்றி பின்னர் தெரிவிக்கிறேன். தற்போது, 'டர்ட்டி பாலிடிக்ஸ்' படத்தை ரிலீஸ் செய்வது தான் எனது முதல்பணி என்று கூறியுள்ளார்.