ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணா டிகே., மற்றும் ராஜ் நிதிமொரு இயக்கத்தில், ஷாகித் கபூரின் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வௌிவந்த படம் ஹேப்பி எண்டிங். ஆனால் இப்படம் ரசிகர்களை கவரவில்லை மாறாக ஷாகித்திற்கு மற்றுமொரு தோல்வி படமாக அமைந்தது.
இந்நிலையில் ஹேப்பி எண்டிங், படத்திற்கு பிறகு ஷாகித் மீண்டும் கிருஷ்ணா டிகே மற்றும் ராஜ் நிதிமொரு இயக்கத்தில் பர்ஷி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் ஷாகித்தின் ஜோடியாக கிருத்தி சனோன் நடிக்கிறார். ஆனால் இப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. அதேசமயம், இப்படத்தை கிடப்பில் எல்லாம் போடவில்லை, தாமதமாகும், தற்போது ஷாகித், ''உத்தா பஞ்சாப்'' என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்தப்படத்திற்கு பிறகு 'பர்ஷி', ஜூலை 2015ம் ஆண்டு பர்ஷி படம் துவங்கும் என்று கூறுகின்றனர்.
இயக்குநர் கிருஷ்ணா டிகே கூறுகையில், சில நாட்களுக்கு முன்னர் ஷாகித் சந்தித்து இந்தப்படம் தொடர்பாக பேசினோம். அதேப்போல் தயாரிப்பாளர் ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தையும் சந்தித்து பேசியுள்ளார். 2015, ஜனவரியில் இப்டம் துவங்கும் என்று கூறியுள்ளார்.