'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிங்கம் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு பிறகு நடிகை கரீனா கபூர், சல்மான் கான் உடன் ''பஜ்ரங்கி பகிஜான்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். கபீர் கான் இயக்கும் இப்படத்தில், கரீனா பிராமண பெண்ணாக நடிக்க இருக்கிறார். லக்னோவில் வசிக்கும் கரீனா, டில்லியில் சந்தி சவுக்கு ஏரியாவுக்கு வருகிறார். வந்த இடத்தில் பஜ்ரங்கி எனும் சல்மான் கானை பார்க்கிறார். ஆரம்பத்தில் முட்டல் மோதலில் ஆரம்பிக்கும் இவர்களது சந்திப்பு பின்னர் காதலாகிறது. ரொமாண்டிக் கம் ஆக்ஷ்ன் படமாக எடுக்கின்றனர். நவம்பரில் முதல்கட்ட ஷூட்டிங் துவங்கியது. தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2015-ம் ஆண்டு, ஜூலை மாதம் படத்தை ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளனர்.