இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அமீர்கானின் படங்களில், 3 இடியட்ஸ் படம் மிகவும் முக்கியமானது. ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர்கான், மாதவன், ஷர்மான் ஜோஷி ஆகியோரது நடிப்பில் வெளிவந்த இப்படம் சூப்பர்-டூப்பர் ஹிட்டானது. இப்படம் பின்னர் தமிழில், ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோரது நடிப்பில் நண்பன் படமாக வெளிவந்தது. இந்தி அளவுக்கு ஹிட் இல்லையென்றாலும், இங்கும் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் 3-இடியட்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க எண்ணியுள்ளார் அதன் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி.
இதுகுறித்து ராஜ்குமார் ஹிரானி கூறுகையில், ஆமாம், 3-இடியட்ஸ் படத்தின் பார்ட்-2-வை இயக்கும் எண்ணம் இருக்கிறது. ஆனால் அது இப்போது சாத்தியமில்லை இன்னும் கொஞ்சம் நாளாகும் என்று கூறியுள்ளார்.