‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சன்னி லியோனுடன் தான் நடிக்க மறுப்பு தெரிவித்ததாக வந்துள்ள தகவல்கள் அனைத்தும் வதந்தியே தவிர, அதில் உண்மை இல்லை என்று நடிகர் இம்ரான் ஹாஸ்மி கூறியுள்ளார். உங்லி, திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தின் புரோமோ பாடல் நிகழ்ச்சியில், சன்னி லியோன் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், இறுதியில், இம்ரான் ஹாஸ்மி திரையில் தோன்றிய நேரத்தில், சன்னி லியோன் அந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. சன்னி லியோனுடன் இணைந்து நடிக்க இம்ரான் விரும்பவில்லை என்பதுபோல செய்திகள் தீ போல பரவின. இதற்கு பதிலளித்த இம்ரான் ஹாஸ்மி, சன்னி லியோனுடன் நடிக்க எனக்கு எந்தவொரு தயக்கமுமில்லை. சன்னி லியோனுடன் தான் நடிக்க மறுத்ததாக வந்த செய்திகள் அனைத்தும் வதந்திகள். நல்ல கதை அமைந்தால், சன்னி லியோனுடன் இணைந்து நடிக்க தயார் என்று இம்ரான் கூறினார்.