'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஹாலிவுட்டில் வெளிவந்த படம், ''தி பால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்''. இப்படத்தை இந்தியில் ரீ-மேக் செய்யப்போவதாக பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனம் அறிவித்தது. ஹோமி அட்ஜானியா இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு மார்ச் மாதம் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது படம் ஆரம்பமாக தாமதமாகும் என தெரிகிறது.
இதுப்பற்றி விசாரித்ததில், இப்படத்தில் ஹீரோ-ஹீரோயினாக வருண் தவான் மற்றும் தீபிகா படுகோனே நடிக்க இருக்கின்றனர். ஆனால் இவர்கள் இருவரும் தங்களது படங்களில் பிஸியாக இருக்கின்றனராம். வருண், தற்போது பத்லாபூர், ஏபிசிடி-2 மற்றும் தனது சகோதரரின் படம் என... தொடர்ந்து ஏப்ரல் வரை பிஸியாக இருக்கிறாராம். இதேப்போல் தீபிகாவும், பஜிராவ் மஸ்தானி உள்ளிட்ட சில படங்களால் பிப்ரவரி - மார்ச் வரை பிஸியாக இருக்கிறாராம். இதனால், தி பால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் படத்தை மார்ச் மாதத்தில் ஆரம்பிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே இப்படம் துவங்க மேலும் சில மாதங்களாகும் என தெரிகிறது.