Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அஜித் மிகச்சிறந்த மனிதர் - ராணா டகுபதி

24 நவ, 2014 - 12:11 IST
எழுத்தின் அளவு:

நடிகை த்ரிஷாவை பற்றி எழுதும்போதெல்லாம், நம்மவர்கள், ராணாடகுபதி, என்ற பெயரைப் பற்றியும் குறிப்பிட்டு எழுதுவார்கள். ஆனால், அதெல்லாம் 'நேற்றோடுபோயாச்சு' கதையாகிவிட்டது. த்ரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் என்ற செய்தி றெக்கை கட்டிப் பறக்கஆரம்பித்த பின், ராணா டகுபதியை பற்றி நம்மவர்கள் மறந்துவிட்டார்கள். ஆனால், ராணா டகுபதி மற்றவர்களைப் பற்றி பாராட்டுவதில் மறக்க முடியாத ஒரு நபராகிவிட்டார்.


சமீபத்திய தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், அவர் நடிகர் அஜித்தை பற்றி மனதார புகழ்ந்து பேசியிருக்கிறார். இத்தனைக்கும் அவர் அஜித்துடன் 'ஆரம்பம்' படத்தில் கௌரவத் தோற்றத்தில், சில காட்சிகளில் தான் இணைந்து நடித்திருக்கிறார். அந்த குறைந்த நாட்களிலேயே, ராணாவின் மனம் கவர்ந்த நடிகராகி விட்டார்அஜித்.“நான் இதுவரை சந்தித்தவர்களிலேயே, இரண்டே இரண்டு பேர் தான் மிகச்சிறந்தவர்கள். ஒருவர் அஜித், மற்றொருவர் அனுஷ்கா,” என அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.


அஜித்தை பற்றி அவருடன் பணியாற்றும் நடிகர்கள் அனைவருமே எப்போதுமே மிகவும் சிறந்த மனிதர் என்று பாராட்டிப் பேசுவார்கள். அந்த அளவிற்கு அவர் எளிமையாகவும், நல்ல நண்பராகவும், அனைவரிடத்திலும் பழகுவார். அவருடன் ஒரு முறை சேர்ந்து படத்தில் பணியாற்றுபவர்கள் தொடர்ந்து அவருடன் அடுத்தடுத்த படங்களில் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அந்த அளவிற்கு அடுத்தவர்கள் மீதும் அவர் அக்கறை கொண்டவர். அதனால்தான், அவரை மற்ற மொழி நடிகர்கள் கூட பாராட்டுகிறார்கள் என அஜித்திற்கு நெருக்கமான ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in