தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹாலிவுட் படங்களை போன்று சமீபகாலமாக பாலிவுட்டிலும் ஒரு படத்தை ஆரம்பிக்கும்போதே படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து வருகிறார்கள். அதன்படி ஷாரூக்கான், அமீர்கான், சல்மான்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். இந்நிலையில் கிரண் ஜோகரின் படத்தில் அக்ஷ்ய் குமார் நடிக்கும் பிரதர்ஸ் படத்தை அடுத்தாண்டு அக்டோபர் 2ம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவித்து இருந்தனர். ஆனால் இப்போது அந்த தேதிக்கு முன்பாகவே படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். படத்தின் ஷூட்டிங் சொன்ன தேதிக்கு முன்னரே முடியும் என தெரிகிறது. இதன்காரணமாக படத்தை அடுத்தாண்டு ஜூலை 31ம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக கரண் ஜோகர் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே அறிவித்த தேதியில் அக்ஷ்ய் குமாரின் வேறு ஒருபடமும் ரிலீஸ் ஆகும் சூழல் இருந்ததாம், அதனால் இப்போது தனது படத்தை முன்கூட்டியே ரிலீஸ் செய்ய இருக்கிறார் கரண் ஜோகர். பிரதர்ஸ் படத்தில் அக்ஷ்ய் தவிர சித்தார்த் மல்கோத்ரா, ஜாக்கி ஷெரப் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.