டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மேரிகோம் படத்தின் வெற்றிக்கு பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பஜிராவ் மஸ்தான் படத்தில் நடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. இதில் பாரம்பரிய மராத்தி பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் பிரியங்கா. இதற்காக மராத்திய கிராமங்களில் பேசும் பேச்சுவழக்கு மராத்தி மொழி பேசுவதற்காக பிரத்யேகமாக பயிற்சி எடுத்து வருகிறாராம்.
இந்த படத்தில் பெஸ்வா பஜிராயின் முதல் மனைவியான காசிபாய் கேரக்டரில் தான் பிரியங்கா நடிக்கிறாராம். இதனால் இந்த படத்திற்காக பேச்சு வழக்கிலான மராத்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி கூறியதால் இந்த பயிற்சி எடுக்கிறாராம். இதற்கு முன் கமினே மற்றும் அக்னிபாத் ஆகிய படங்களில் மராத்தி பெண்ணாக நடித்திருந்தாலும் இது முற்றிலும் மாறுபட்ட வேடமாம்.
17ம் நூற்றாண்டில் நடப்பது போன்ற கதை என்பதால் அதற்காக தினமும் சூட்டிங்கில் செட்டில் பல பயிற்சிகளை எடுத்துக் கொண்டு, தன்னை அந்த காலத்து பாரம்பரிய மராத்தி பெண்ணாகவே மாற்றிக் கொண்டு வருகிறாராம் பிரியங்கா. இது வரலாற்று காலத்து கதை என்பதால் தற்போது பேசப்படும் மராத்தி மொழியில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும், உச்சரிப்பதற்கு கடினமானதாகவும் இருப்பதால் தான் பிரியங்காவிற்கு இந்த பிரத்யேக பயிற்சியாம். இந்த கேரக்டருக்காக தன்னை அனைத்து வகையில் தயார் செய்து கொள்ள 15 நாட்கள் பயிற்சி வகுப்பையே ஏற்பாடு செய்துள்ளாராம் பிரியங்கா.