விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
விரைவில் வெளிவர இருக்கும் தி ஷவ்கீன்ஸ் படத்தில் அபிஷேக் பச்சன் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என்பது தான் கடந்த சில நாட்களாக பாலிவுட்டின் டாக்காக இருந்து வருகிறது. தற்போது இந்த படத்தில் கரீனா கபூரும் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளாராம்.கரினா கபூர், ஏற்கனவே ஹேப்பி எண்டிங் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தி ஷவ்கீன்ஸ் படத்தில் கரீனா நடித்த காட்சிகள் மும்பையின் பந்திராவில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் படமாக்கப்பட்டதாம். இந்த ஸ்டுடியோவில் ஏற்கனவே தனது போட்டோ சூட் நடைபெற்று வருவதால், அந்த ஸ்டுடியோவிலேயே தான் நடிக்கும் காட்சிகளை எடுக்குமாறு படத் தயாரிப்பாளர்களிடம் கரீனா கேட்டுக் கொண்டதாலேயே இங்கு சூட்டிங் நடத்தினார்களாம். இந்த படத்தின் டைரக்டர் அபிஷேக் ஷர்மா முதன் முறையாக கரீனாவுடன் இணைந்து பணியாற்றுவதால், கரீனாவின் நடிப்பை பார்த்து அசந்து போய்விட்டாராம்.
கரீனாவின் நடிப்பு பற்றி கூறிய டைரக்டர் அபிஷேக், கேமிராவிற்கு முன் அவரது செயல்பாடு நடிப்பின் உச்சக்கட்டம். நேரத்திற்கு தகுந்த போல் அவரது நகைச்சுவை, முகபாவனை ஆகியவை மிகவும் பாராட்டப்பட வேண்டியது என்றார். தி ஷவ்கீன்ஸ் படத்தில் அனுபம் கர், அன்னு கபூர், பியூஸ் மிஸ்ரா, லிசா ஹைடன், அக்ஷை குமார் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். அபிஷேக் பச்சனும் கரினா கபூரும் கவுரவ வேடத்தல் நடிக்கின்றனர். நவம்பர் 7ம் தேதி இந்த படம் வெளிவர உள்ளது.