தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான். தற்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் சல்மான் கான், தனது தங்கை அர்பிதா கானின் திருமண வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை தனது தங்கையின் திருமணத்திற்கு அழைக்க இருக்கிறார். மோடி பிரதமராக பதவியேற்றபோது, சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம் கானை மோடி அழைத்து இருந்தார். அதன்படி இப்போது மோடியை தங்களது இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள வைக்க எண்ணியுள்ளார்கள் சல்மான் மற்றும் சலீம். இதனை சல்மான் கான் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து சல்மான் கான் கூறியுள்ளதாவது, ஆமாம், பிரதமர் மோடியை எங்களது இல்ல திருமணத்திற்கு அழைக்க எண்ணியுள்ளோம். இதுதொடர்பாக அவரை சரியான நேரத்தில் சந்திக்க இருக்கிறேன், அதற்கான நேரத்தை அவர் எனக்கு கொடுப்பார் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.