ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குநர் சஞ்சய்லீலா பன்சாலி இயக்கும், ''பஜிராவ் மஸ்தானி'' படத்தில் ப்ரியங்கா சோப்ராவும் நடிக்க இருக்கிறார். இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட சஞ்சய் லீலா பன்சாலி, ''ராம் லீலா'' படத்திற்கு பிறகு தற்போது, பஜிராவ் மஸ்தானி என்ற படத்தை இயக்குகிறார். ராம்லீலா படத்தில் நடித்த ரன்வீர் சிங், தீபிகா படுகோனேயே இந்தப்படத்திலும் ஜோடி சேருகின்றனர். கூடவே இப்படத்தில் ப்ரியங்கா சோப்ராவும் நடிக்கிறார். பஜிராவ் மஸ்தானி படம் மராட்டிய அரசர் பஜிராவ்-மஸ்தானி ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இதில் பஜிராவ்வாக ரன்வீங் சிங்கும், மஸ்தானியாக தீபிகாவும் நடிக்கின்றனர். பஜிராவ்வின் முதல்மனைவி வேடத்தில் ப்ரியங்கா சோப்ரா நடிக்கிறார். மேரி கோமில் ப்ரியங்காவின் நடிப்பை பார்த்துவிட்டு, இந்தரோலில் அவரை நடிக்க வைக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி.