'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கேங்ஸ் ஆப் வசிப்பூர், ஸார்ட்ஸ், டிடே போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஹூமா குரேஷி. தற்போது இவர் பதல்பூர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜூலியின் வழியை தான் பின்பற்ற போவதாக ஹூமா குரேஷி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஏராளமான ஹாலிவுட் ஹிட் படங்களில் நடித்த ஏஞ்சலினா ஜூலி, தனது 39வயதில், ''இன் தி லேண்ட ஆப் பிளட் அண்ட் ஹனி'' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்தார். அவரைப்போலவே நானும் இயக்குநராக அவதரிப்பேன். ஆனால் அது எனது 55-வது வயதில் நிகழும் என நினைக்கிறேன். தனது சகோதரர் சாகீப் சலீம் உடன் இணை இயக்குநராக பணியாற்றுவீர்களா என்று கேட்டபோது, அது நடப்பதற்கான சாத்தியம் இல்லை. ஏனென்றால், அவரது சிந்தனையும், எனது சிந்தனையும் முற்றிலும் மாறுபட்டது. அதேசமயம் நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வாய்ப்பு இருக்கிறது, ஆனால் அது எப்போது நிகழும் என தெரியவில்லை என்று கூறியுள்ளார்.