சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் அனில் கபூர். இப்போதும் தனது வயதுக்கு ஏற்ற தோற்றங்களில் நடித்து வருகிறார். இவரது மகள் சோனம் கபூர், இப்போது பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகையாக திகழ்கிறார். இந்நிலையில் அனில் கபூர் சொந்தமாக ஸ்டுடியோ கட்ட எண்ணியுள்ளார். இதுகுறித்து அவரது நண்பர் ஒருவர் கூறுகையில், ஸ்டுடியோ கட்ட வேண்டும் என்று அனிலின் அப்பா சுரிந்தரே எண்ணியிருந்தார். ஆனால், அவரால் முடியாமல் போய்விட்டது. இதனால் அவரது கனவை இப்போது அனில் நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணுகிறார்.
இதுகுறித்து அனில் கபூர் கூறுகையில், நானும் ரொம்ப நாட்களாக ஸ்டுடியோ கட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கான முயற்சிகளிலும் இறங்கியுள்ளேன், அதிலிருந்து எப்போதும் பின்வாங்க மாட்டேன். கிட்டத்தட்ட எல்லா ஊர்களுக்கும் நான் சென்றுள்ளேன், இதனால் எனக்கு ஒரு நிலைத்தன்மை கிடைத்துள்ளது. நான் கட்டும் ஸ்டியோ, நான் இல்லையென்றாலும் அது தனிச்சையாக இயங்கும் அளவுக்கு இருக்கும் என்று கூறியுள்ளார்.