பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டின் கவர்ச்சி புயல் சன்னி லியோன். அவரது நடிப்பில் வெளியான ராகினி எம்எம்எஸ்-2 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். கவர்ச்சி புயலான சன்னி, இப்போது ஜேனாக நடிக்க இருக்கிறாராம். இயக்குநர் பி சுபாஷ், 1985ம் ஆண்டு வெளிவந்த டார்ஜன் படத்தை தற்போது ரீ-மேக் செய்ய இருக்கிறார். இதில் சன்னியின், முந்தைய படங்களில் அவரது நடிப்பை பார்த்து, இந்தப்படத்தில் அவரை நடிக்க வைக்கலாம் என்று எண்ணியுள்ளார் சுபாஷ். டார்ஜன் ரீ-மேக்கில், சன்னி ஜேனாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் முக்கிய ரோலில் போர்ஸ், பில்லா-2, துப்பாக்கி படங்களின் வில்லனான வித்யூத் ஜம்வால் நடிக்க இருக்கிறார். விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.