டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு டான்சில் ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது. கடந்த 28ந் தேதி அவருக்கு 32வது பிறந்த நாள். அதை கொண்டாடி முடித்த கையோடு மருத்துவமனையில் சேர்ந்த அவர் தன் தொண்டையில் டான்சில் ஆபரேசன் செய்து கொண்டார். 5 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்புகிறார்.
இதுகுறித்து ரன்பீர் கபூரின் தந்தை ரிஷிகபூர் கூறியதாவது: ரன்பீருக்கு நீண்ட நாட்களாக தொண்டையில் டான்சில் பிரச்னை இருந்தது. இதனால் அவர் வசனம் பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். இந்த முறை தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைத்தது. அதில் ஆபரேஷனை முடித்துக் கொண்டார். இது மைனர் ஆபரேஷன்தான். அவர் நலமுடன் இருக்கிறார் என்கிறார் ரிஷி கபூர்.