தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிகே படத்திற்காக அமீர்கான் நிர்வாணமாக நிற்பது போன்ற ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே அப்படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது சமூக ஆர்வலர்களிடமும் கடுமையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலருக்கு சென்சார் போர்ட் யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இந்த டிரைலரிலும் அமீர்கானின் நிர்வாண காட்சி இடம்பெற்றுள்ளதாம். இருப்பினும் அக்காட்சி இடம்பெற்றதற்கான காரணத்தை சென்சார் போர்ட் நிர்வாகிகளிடம் படக்குழுவினர் தெளிவுபடுத்தி விட்டனராம். இந்த விளக்கத்தை ஏற்று அமீர்கானின் நிர்வாண காட்சியுடனான டிரைலரை வெளியிட சென்சார் போர்ட் அனுமதி அளித்துள்ளதாம்.
இதற்கு முன் ஃபைண்டிங் ஃபன்னி படத்தில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என சென்சார் போர்ட் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தீபிகாவின் அரைநிர்வாண காட்சியும் சென்சாரின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
ராஜ்குமார் ஹிரானி இயக்கி உள்ள பிகே படத்தில் அமீர் கான் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி ரிலீசாக உள்ளது.