வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பராகான் இயக்கத்தில், ஷாரூக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, போபன் இரானி, சோனு சூட், விவன் ஷா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம்ஹேப்பி நியூ இயர். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன்ஒருபகுதியாக அமெரிக்காவுக்கு சென்ற ஹேப்பி நியூ இயர் படக்குழு அங்கு ஒரு அமர்க்களமான நிகழ்ச்சியை அரங்கேற்றியுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன், நியூ ஜெர்சி போன்ற இடங்களில் செப். 19 மற்றும் 20 தேதிகளில் பிரமாண்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் ஷாரூக்கான், அபிஷேக், தீபிகா படுகோனே, போபன் இரானி, இயக்குநர் பராகான், பாடகர் யோ யோ ஹனி சிங், கனிகா கபூர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஷாரூக்கான் வழக்கம்போலவே தனது அற்புதமான நடனத்தால் பார்வையாளர்களை அசத்தினார். அதேப்போல் தீபிகா, அபிஷேக் போன்றோரும் அற்புதமான நடனம் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தனர். போபன் இரானி, பராகான் உடன் சேர்ந்து நடனத்துடன் கூடிய காமெடி நிகழ்ச்சியை அரங்கேற்றினார். ஹனி சிங், கனிகா ஆகியோர் வழக்கம்போல் தங்களது குரலால் பார்வையாளர்களை பாட்டு மழையில் நனைய வைத்தனர். நிகழ்ச்சியின் ஹைலைட்டாக ஷாரூக்கானின் லுங்கி டான்ஸ் பாட்டுக்கு ஷாரூக், தீபிகா ஆகியோர் உடன் அபிேஷக், சோனு சூட், போபமன் இரானி உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவும் சேர்ந்து நடனம் ஆடியது ரசிகர்களை இன்பக்கடலில் ஆழ்த்தியது.