ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் நடிகை பிபாசா பாசுவும், நடிகர் ஹர்மான் பட்டும் இணைந்து மும்பையை தலைமையிடமாகக் கொண்டு உடற்பயிற்சி கூடம் ஒன்றை துவக்க உள்ளதாக செய்தி வெளியான சில நாட்களிலேயே, அவர்கள் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாகவும் வதந்திகள் கசிய துவங்கி உள்ளன.
பிபாசா-ஹர்மான் துவங்க திட்டமிட்டிருப்பதை போன்றே, பிபாசாவின் முன்னாள் காதலர் டினோ மோரியாவும் உடற்பயிற்சி கூடம் ஒன்றை துவங்க உள்ளாராம். ஆனால் ஹர்மனுடன் இணைந்து பிபாசா துவங்க உள்ள உடற்பயிற்சி கூடம் வியாபார நோக்கத்திற்காக இல்லையாம். இவர்களின் இந்த கூட்டணி தொழிலில் மட்டுமல்ல படங்களிலும் தொடர்கிறதாம்.
பிபாசா எப்போதும் ஹர்மன் இருக்கும் இடங்களிலேயே முகாமிட்டிருப்பதாகவும், அவர்கள் பேசி கொள்ளும் விஷயங்கள் காதல் சம்பந்தமான கதைகளாக இருப்பதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு இடையேயான காதல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இதே போன்று உறுதி செய்யப்படாத மற்றொன்று தகவலும் கூறப்படுகிறது. பிபாசா அவரது முன்னாள் காதலர்களான டினோ மற்றும் ஜான் ஆப்ரகாமிடம் எவ்வாறு நெருங்கி பழகினாரோ அதுபோன்றே ஹர்மானிடமும் நெருங்கி பழகி வருகிறார் என்பது தானாம் அது.