டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அனில் கோயல் நடித்து வரும் புதிய படம் பாய் கா மால் ஹாய். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹிரிஸ்டா பகத்தும், சோபியா ஹயாத்ம் நடிக்க இருக்கின்றனர். இவர்களுடன் மிலிந்த் குணாஜி, சுனில் பால் ஆகியோரும் நடிக்க இருக்கின்றனர். நகைச்சுவை படமாக உருவாக இருக்கும் இப்படம் இந்த ஐந்து பேரை சுற்றியே நகருகிறது. 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இப்படத்தில் அனில் பப்லு என்ற கேரக்டரில் ஏழை நடுத்தர வர்க்கத்தை நபராக நடிக்கிறார். இப்படம் தனக்கு ஒரு நல்லதொரு இடத்தை பெற்று தரும் என நம்புகிறார் அனில். இந்தப்படம் தவிர்த்து அனில் கோயல், பேஷன் இன் பாரீஸ், டப்பர்ஸ், பேஷனபில் பிட்ச் போன்ற படங்களிலும் கமிட்டாகியுள்ளார்.