பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அர்ஜூன் கபூர், தீபிகா படுகோனே, டிம்பிள் கபாடியா, நஸ்ரூதீன் ஷா, பங்கஜ் கபூர் ஆகியோரது நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஃபைண்டிங் ஃபேனி. கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் வெளியான இப்படம் ரிலீஸான மூன்று நாளில் 1.6 மில்லியன் டாலர் வசூலாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இங்கிலாத்தில் இப்படம் ஆங்கிலத்தில் வெளியானது. அதில் அமெரிக்காவில் 5,35,000 டாலரும், இங்கிலாந்தில் 1,93,000 டாலரும் வசூலாகியுள்ளன. ஹாலிடே மற்றும் மேரி கோமின் படங்களை காட்டிலும் இப்படம் நல்ல வசூலை பெற்றுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இப்படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. மத்திய கிழக்க நாடுகளில் 4,15,000 அமெரிக்க டாலரும், பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, தாய்லாந்து, நேபாள், சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளில் 4,50,000 அமெரிக்க டாலரும் வசூலாகியுள்ளன.
மொத்தத்தில் முதல் வார மூன்று நாட்கள் முடிவில் பைண்டிங் பேனி படம் 1.6 மில்லியன் டாலர் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.