இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல ஓவியர் ராஜா ரவி வர்மாவின் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாக கொண்டு ரங் ரசியா என்ற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. ரன்தீப் ஹூடா, நந்தனா சென் மற்றும் புதுமுகம் திரிப்தா பிரஷார் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்க, கேத்தன் மேத்தா இயக்குகிறார்.
இந்நிலையில் இப்படத்தை பிரபலப்படுத்தும் விதமாகவும், ஓவியர் ரவிவர்மா பற்றி தெரிந்து கொள்ளும் விதமாகவும், ரங் ரசியா என்ற படத்தின் பெயரிலேயே பேஸ்புக் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பேஸ்புக்கில் ராஜா ரவி வர்மா பற்றி பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ளலாம். 1848-ம் ஆண்டு அவர் பிறந்தது முதல் அவர் வாழ்வில் நடந்த விஷயங்கள், எப்படி ஓவியர் ஆனார், தன் ஓவிய வாழ்க்கையின் அனுபவங்கள், எந்த மாதிரியான ஓவியங்களை அவர் வரைந்தார், ஓவியம் வரை அவர் எந்த மாதிரியான விஷயங்களை பயன்படுத்தினார் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இந்த பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரங் ரசியாவின் பேஸ்புக் முகவரி : https://www.facebook.com/RangRasiyaFilm/app_128953167177144