ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் அறிமுகமான அசின். அதன் பிறகு தமிழில் கமல், விஜய், அஜீத், சூர்யா, விக்ரம் என டாப் ஹீரோக்களுடன் நடித்தார். தமிழில் அவர் நடித்த கஜனி படம் இந்திக்கு சென்றபோது அப்படியே ஏ.ஆர்.முருகதாஸ் அசினையும் அழைத்து சென்றார். இந்தி கஜினி பெரிய வெற்றிபெறவே அங்குள்ள கான், கபூர் நடிகர்களை பிரண்டாக்கி கொண்டு நடிக்க ஆரம்பித்தார். லண்டன் ட்ரீம்ஸ், ரெடி, ஹவுஸ்புல் 2, போல் பச்சன், கில்லாடி 786 படங்களில் நடித்தார் எல்லாமே சுமார்தான். தற்போது ஆல் இஸ் வெல் படத்தில் மட்டும் நடித்து வருகிறார். வேறு வாய்ப்புகள் இல்லை.
இந்தியில் அவர் நினைத்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. ப்ரியங்கா சோப்ரா, சோனாக்ஷி சின்ஹா, ஆலியா பட், கேத்ரினா கைப் போன்ற அழகு தேவதைகளுக்கு முன்னால் அசினால் தாக்கு பிடிக்கமுடியவில்லை. பொறுமையாக வாய்ப்புகளுக்கு காத்திருந்தார். எதுவும் நடக்கிற மாதிரி தெரியவில்லை. அதனால் இனி தென்னிந்திய படங்களில் குறிப்பாக தமிழ் படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். "விரைவில் தென்னிந்திய ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி சொல்வேன்" என்று தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழில் அவர் விட்டுச் சென்ற பிறகு பல மாற்றங்கள் நடந்து விட்டது. ஹன்சிகா நின்று விளையாடுகிறார். லட்சுமிமேனன், ஸ்ரீதிவ்யா, ஆனந்தி என்ற அறிமுகங்கள் கலக்குகிறார்கள். சமந்தா, அனுஷ்கா பக்கத்து மாநிலத்திலிருந்து வந்து விளையாடுகிறார்கள். நயன்தாராவும், த்ரிஷாவும் நல்ல சம்பளம் கிடைத்தால் யாருடனும் நடிக்க ரெடி என்றும் நல்ல கேரக்டர் அமைந்தால் சம்பளத்தை பற்றி கவலைப்படாமல் நடிக்க ரெடி என்றும் பாலிசி வைத்துக் கொண்டு படங்களை கமிட் செய்கிறார்கள். இதற்கு இடையில் அசின் என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை.