மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த இலியானா, இப்போது இந்தியிலும் பிஸி நடிகையாகிவிட்டார். இவர் தற்போது ராஜ் மற்றும் கிருஷ்ணா டிகே இயக்கும், ஹேப்பி எண்டிங் படத்தில் சைப் அலிகான் உடன் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளங்களில் வெளியானது. இதனை இப்படத்தின் ஹீரோயினான இலியானா தான் வெளியிட்டு விட்டார் என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள இலியானா, ஹேப்பி என்டிங் போஸ்டர் தொடர்பாக வெளியான செய்திகள் எதுவும் உண்மை கிடையாது. சைப்பிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லலாம் என்று எண்ணி நான் எனது டுவிட்டரில் எங்களது இருவரது போட்டோக்களை மட்டுமே வெளியிட்டேன், மற்றபடி அது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கிடையாது. உங்களுக்கே தெரியும் எப்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று, பொறுத்து இருங்கள், ரெடியானதும் நானே அதை போஸ்ட் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.