'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அடேங்கப்பா...நான்கே வாரங்களில் இவ்வளவு கோடியா என ஆச்சரியத்தில் வாயைப் பிளக்க வைக்கிறது சல்மான் கான் நடித்துள்ள 'கிக்' படத்தின் சாதனை. இதற்கு முன் பல படங்கள் இந்த சாதனையைப் புரிந்திருந்தாலும் சல்மான் கான் நடித்த 'கிக்' படம் நான்கே வாரங்களில் இந்த சாதனையைப் புரிந்திருப்பது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்தித் திரையுலக வரலாற்றிலேயே அதிக வசூலைப் புரிந்த படங்களாக 'தூம் 3 - 542 கோடி', 'சென்னை எக்ஸ்பிரஸ் - 422 கோடி', '3 இடியட்ஸ் - 395 கோடி' ஆகிய படங்கள் சாதனை புரிந்துள்ளன. இந்த வரிசையில் தற்போது 'கிக்' திரைப்படம் 375 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
இந்தியாவில் மட்டும் இந்தப் படம் 230 கோடி ரூபாய் வசூலைப் புரிந்திருக்கிறதாம். வெளியான ஐந்து நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது. இந்தித் திரையுலகில் சல்மான் கான் நடித்த படங்களில் 7 படங்கள் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை புரிந்திருக்கிறது. இந்த அரிய சாதனையை முதலில் புரிந்திருப்பவர் சல்மான் கான் மட்டுமே. இதற்கு முன் “ஜெய் ஹோ, ரெடி, தபாங், தபாங் 2, பாடிகார்ட், ஏக் தா டைகர்” ஆகிய படங்கள் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்த படங்கள். இந்த வரிசையில் தற்போது 'கிக்' படமும் இணைந்துவிட்டது.
'தபாங்' படம்தான் சல்மான் கானை முதன் முதலில் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைய வைத்தது. அதன் பின் அவர் தொடர்ந்து நடிக்கும் படங்கள் சர்வ சாதாரணமாக 100 கோடி ரூபாய் வசூலைத் தந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முன் சல்மான் கான் நடித்த 'ஏக் தா டைகர்' படம் 310 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. இப்போது அந்த சாதனையையும் 'கிக்' படம் முறியடித்துள்ளது.