வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சல்மான் கான் படத்திற்கு கிடைக்கும் வசூலைக் கண்டு பல பாலிவுட் நட்சத்திரங்கள் ஆடிப் போயிருக்கிறார்களாம். இவருக்கு மட்டும் இப்படி வசூல் அள்ளிக் குவிகிறதே என்ற ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் மூழ்கிப் போயிருக்கிறார்கள். அநேகமாக இந்த ஆண்டில் இதுவரை வந்த படங்களிலேயே 'கிக்' திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்கிறார்கள். வெளியான நான்கே நாட்களில் இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்த இந்தப் படம் உலகம் முழுவதும் இதுவரை வசூல் செய்த தொகை 150 கோடியைத் தாண்டி விடும் என்கிறார்கள்.
சல்மான் கான் நடித்து இதுவரை வெளிவந்த படங்களின் வசூலையெல்லாம் இந்தப் படம் முறியடிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். சல்மான் கான் ஜோடியாக நடித்துள்ள ஜாக்குலின் பெர்ணான்டசின் கிளாமரான நடிப்பும், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாம். தெலுங்கு, தமிழில் இந்தப் படம் ஏற்கெனவே வெளிவந்திருந்தாலும், கதையைக் கொஞ்சம் மாற்றி பாலிவுட் ரசிகர்களுக்கு ஏற்பட எடுத்திருந்தார்களாம். அதை இங்குள்ளவர்கள் விமர்சனம் செய்தாலும் உலகம் முழுவதும் உள்ள ஹிந்திப் பட ரசிகர்கள் நன்றாகவே ரசிக்கிறார்களாம்.
இப்படத்தின் தமிழ்ப் பதிப்பான 'தில்லாலங்கடி'யில் ஜெயம் ரவி 'கிக்கோ கிக்கு' என டயலாக் பேசுவார். அது ஜெயம் ரவிக்கு நடந்ததோ இல்லையோ, சல்மான்கானுக்கு வெற்றியிலும், வசூலிலும் 'டபுள் கிக்கோ கிக்கு' என நடந்து வருகிறது.