‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
வித்யாபாலன் நடிப்பில் வெளிவந்து ஹிட்டான படம் கஹானி. சுஜய் கோஷ் இயக்கி இருந்தார். வெளிநாட்டில் இருந்து வரும் கர்ப்பினி மனைவி லோல்கட்டா நகரில் தொலைந்து போன தன் கணவரை தேடும் கதை. இதே படத்தை தெலுங்கில் அனாமிகா என்ற பெயரிலும், தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரிலும் ரீமேக் செய்தார்கள். வித்யா பாலன் கேரக்டரில் நயன்தாரா நடித்திருந்தார்.
தற்போது இந்தப் படத்தை ஹாலிவுட்டில் எடுக்க இருக்கிறார்கள். தி உமன் வித் டிராகன் என்ற படத்தை இயக்கிய நீல்ஸ் ஆர்டன் ஓல்ப் இயக்குகிறார். படத்திற்கு டெய்ட்டி என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். ஓய்ஆர்எப் என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. அமெரிக்காவில் இருந்து வரும் வெள்ளைக்கார பெண் இந்தியாவுக்கு சுற்றுலா வந்து காணாமல்போன தன் கணவரை தேடுவது மாதிரி கதையை மாற்றி எடுக்கிறார்கள். சந்த்ரா புல்லக் அல்லது ஏஞ்சலினா ஜூலி நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.