தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் வசந்த் இயக்கிய மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அறிமுகமானவர் சுர்வீன் சாவ்லா. இவர் நடித்திருக்கும் இந்திப் படம் ஹேட் ஸ்டோரி 2. இது 2012ம் ஆண்டு வெளிவந்த ஹேட் ஸ்டோரியின் இரண்டாம் பாகம். தன்னை பலாத்காரம் செய்து சீரழித்தவர்களை செக்சை கொண்டே வீழ்த்தி கொல்வது மாதிரியான கதையை கொண்ட படம். படத்தில் வன்முறை காட்சிகளும், செக்ஸ் காட்சிகளும் நிறைய இருப்பதாக நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
படத்தின் டீசர், தொலைக்காட்சி விளம்பரம், டிரைலர் போன்றவற்றில் பல காட்சிகளை தணிக்கை குழுவே வெட்டச் சொல்லி விட்டது. தற்போது இந்தப் படம் பற்றிய பிரச்னை கர்நாடக சட்டசபையில் கிளப்பப்பட்டது. சமாஜ்வாடி ஜனதாக கட்சி உறுப்பினர் ஒய்.எஸ்.வி தத்தா என்பவர் இந்த பிரச்னையை எழுப்பினார். "இளைஞர்களை குற்றம் செய்ய தூண்டும் விதமான காட்சிகளை கொண்ட ஹேட் ஸ்டோரி 2 படத்தை தடைசெய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் சீத்தாரம்மையாவும், உள்துறை அமைச்சர் ஜார்சும் இதுபற்றி படத்தை பார்த்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டனர்.