Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

விருதுகளை பாத்ரூம் கதவின் கைபிடியாக்குவேன் : நசுருதீன் ஷா

07 ஜூன், 2023 - 13:32 IST
எழுத்தின் அளவு:
I'll-make-the-awards-the-handle-of-the-bathroom-door-says-Naseeruddin-Shah

பழம்பெரும் பாலிவுட் நடிகர் நசுருதீன் ஷா. தற்போதும் பிசியாக நடித்து வருகிறார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு கிளப்புவார். அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் விருதுகள் குறித்து கருத்து கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:

தற்போது சினிமா துறையில் இருக்கும் நடிகர்களில் ஒருவரை தேர்வு செய்து அவரை இந்த ஆண்டின் சிறந்த நடிகர் என்று யாரோ அறிவிப்பது எந்த அளவுக்கு சரியானது? என்று தெரியவில்லை. நடிப்புக்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறார்கள் என்றும் புரியவில்லை. விருது கொடுப்பவர்களுக்கு நடிப்பு பற்றி என்ன தெரியும் என்றும் தெரியவில்லை. விருதுகளைப் பார்த்து நான் பூரித்துப் போக மாட்டேன். சமீபத்தில் எனக்கு அறிவித்த இரண்டு விருதுகளை வாங்கிக் கொள்ளகூட நான் செல்லவில்லை. ஆரம்பத்தில் விருதுகள் வந்தபோது மிகவும் மகிழ்ந்தேன். அதன் பிறகு விருதுகள் எப்படி வருகின்றன என்பது தெரிந்ததும் அவற்றின் மீது எனக்கு இருந்த ஆர்வம் போய்விட்டது.

ஏதேதோ பெயர்களால் விருதுகளை கொடுக்கிறார்கள். அவற்றால் எனக்கொன்றும் பெருமையாக இல்லை. எனக்கு நிறைய விருதுகள் வந்துள்ளன. ஒருவேளை நான் பண்ணை வீடு கட்டிக் கொண்டால் அதில் பாத்ரூம்களுக்கு கைப்பிடியாக இந்த விருதுகளை வைத்துக் கொள்வேன். நான் ஜனாதிபதி கையால் பெற்ற பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளைப் பெற்றபோது மட்டும் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' படத்தின் டீசர் வெளியானது!'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' படத்தின் டீசர் ... கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வாரா பாஸ்கர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
08 ஜூன், 2023 - 09:50 Report Abuse
Matt P விருதுகள் எனக்கு வந்தபோது மகிழ்ந்தேன். அடுத்தவர்களுக்கு கிடைத்தபோது மகிழ்சி போய்விட்டது. ...இயற்கையா நிறய பேருக்கு வரும் மனப்பாதிப்பு தான்.
Rate this:
Senthoora - Sydney,ஆஸ்திரேலியா
08 ஜூன், 2023 - 17:18Report Abuse
Senthooraஅவர் தனக்கு வந்த விருதையே புறக்கணுத்துவிட்டாரே. பிறகு என்ன வியாகிஞானம்....
Rate this:
08 ஜூன், 2023 - 04:10 Report Abuse
V.Saminatha அது எப்பொது யாரால் தரப்பட்டது?
Rate this:
07 ஜூன், 2023 - 21:24 Report Abuse
Ranjit Kumar Waste fellow
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in