இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சுமார் மூஞ்சி குமாருக்கு ஏற்பட்ட மாதிரியே ஒரு பிரச்னை கவலைப்படாத வாலிபர் சங்கத் தலைவருக்கும் ஏற்பட்டதாம். அஞ்சாத படம் எடுத்து நைஞ்சுபோன பிரதர்ஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டாரின் பெயரையும், பழனி கடவுள் பெயரையும் கொண்ட படத்தில் நடிக்க க.வா.ச தலைவருக்கு ஒரு கோடி சம்பளம் பேசி அட்வான்ஸ் கொடுத்திருந்தாங்களாம். அதற்கு பிறகு பல வெற்றிகளை ருசித்த தலைவரின் சம்பளம் இப்போ 7 கோடியை தொட்டு விட்டது. படத்தை ஆரம்பிக்கலாமான்னு பிரதர்ஸ் கேட்டதுக்கு "இப்போ என்னோட சம்பளம் 7 கோடி மீதி 6 கோடியை எடுத்து வையுங்க சூட்டிங் போகலாம்"ன்னு சொன்னாராம் தலைவர். ஏற்கெனவே பல நிதி சிக்கல்ல மாட்டியிருக்கும் பிரதர்ஸ் பிரச்சினையை சங்க பஞ்சாயத்தில் வைக்க... இருவரையும் அழைத்து பேசிய சங்கம் அங்கிட்டும் இல்லாம இங்கிட்டும் இல்லாம மூணு கோடி சம்பளமுன்னு பேசி முடிச்சாங்களாம். ஜனவரி மாசத்துலேருந்து சூட்டிங் கிளம்புறாங்களாம்.